தங்கம், வெள்ளி விலை சரிவு!

புதன், 9 ஏப்ரல் 2008 (13:56 IST)
மும்பையில் இன்று 24 காரட் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.225-ம், 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.120-ம் குறைந்தது.

உலக சந்தையில் தங்கம, வெள்ளி விலை அதிகரித்தது. ஆனால் மும்பை சந்தையில் தங்கம, வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால், இதன் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 918.20 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 913.10/913.90. இதே போல் வெள்ளியின் விலை 17.66/11.71 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 17.64/17.69 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,870
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,815
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,650

வெப்துனியாவைப் படிக்கவும்