பங்குச் சந்தைகளில் சரிவு

வியாழன், 27 மார்ச் 2008 (11:54 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டபங்குசசந்தைகளிலுமகுறியீட்டஎண்களசரிந்தன.

நேற்று முன்தினம் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தது. ஆனால் நேற்று நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்த பங்குச் சந்தை இன்று காலையில் இருந்தே சரிவை சந்தித்தது.

காலை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 204 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 15,883.03 ஆக குறைந்தது.

சென்செக்ஸ் 16,000 விட குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 59.25 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,769.60 ஆக குறைந்தது.

இன்று காலையில் இருந்தே வங்கி, வாகன உற்பத்தி பிரிவு பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்யும் போக்கு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலை 11 15 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 134.88 புள்ளிகளகுறைந்து குறியீட்டஎண் 15,951.05 ஆக குறைந்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 21.45 புள்ளிகளகுறைந்து குறியீட்டு எண் 4807.40 ஆகுறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 9.98, பி.எஸ்.இ.500-29.05 புள்ளிகளகுறைந்தன. ஆனால் சுமால் கேப் 30.55 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிபங்குசசந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 1,165 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,215 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 49 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 109.74, நாஸ்டாக் 16.69 புள்ளிகள் குறைந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. சிலவற்றில் குறைந்து இருந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 3.43, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 2.32, ஜப்பானின் நிக்கி 118.67 சீனாவின் சாங்காய் காம்போசிட் 251.70 புள்ளிகள் குறைந்தஇருந்தது.

ஆனால் ஹாங்காங்கினஹாங்செங் 88.65 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தையிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலையே நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்