மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சரிந்த குறியீட்டு எண்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் அதிகரித்தன. ஆனால் இன்று காலை முதல் இறுதி வரை எல்லா பிரிவு பங்குகளும் ஒரே நிலையாக இல்லாமல் பங்குகளின் விலைகள் அதிகரிப்பது, பிறகு குறைவது என்றே தொடர்ந்தது.
இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது மற்ற ஆசிய பங்குச் சந்தைகளிலும் இதே நிலையே இருந்தது. ஆனால் ஐரோப்பிய பங்குச் சந்தையில் நேற்றைய நிலை மாறியது. ஐரோப்பிய பங்கு சந்தைகளில் நேற்று பங்கு விலைகள் குறைந்தன. ஆனால் இன்று அதிகரித்தது.
இதன் தாக்கத்தினால் தான் இந்திய பங்குச் சந்தை சரிவை சந்திக்காமல் தப்பித்தது. நேற்றைய இழப்பை ஈடுகட்ட முடியாவிட்டாலும், இன்று ஆறுதல் அளிப்பது போல் பங்கச் சந்தை வர்த்தகம் இருந்தது.
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 23.97 புள்ளிகள் அதிகரித்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் 14,833.48 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 29.90 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,533.00 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 157.03, மிட் கேப் 90.44,பி.எஸ்.இ 500-22.14 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி 34.40, சி.என்.எக்ஸ் 100- 16.55, சி.என்.எக்ஸ் டிப்டி 50.05, சி.என்.எக்ஸ் 500- 0.45 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 104.10, பாங்க் நிஃப்டி 83.40, சி.என்.எக்ஸ் மிட் கேப் 46.45,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 14.25 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 849 பங்குகளின் விலை அதிகரித்தது. 1767 பங்குகளின் விலை குறைந்தது. 59 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி நிறுவனங்களின் பிரிவு குறியீட்டு எண் 2.07%, வங்கி பிரிவு 0.99%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.92% குறைந்தன.
அதே நேரத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.04%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.01%, மின் உற்பத்தி பிரிவு 0.62%, வாகன உற்பத்தி பிரிவு 0.22%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.79%, தொழில்நுட்ப பிரிவு 0.83%, ரியல்எஸ்டேட் 1.92% அதிகரித்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 18 பங்குகளின் விலை அதிகரித்தது. 12 பங்குகளின் விலை குறைந்தது.