மத்திய பட்ஜெட் பங்குச் சந்தை வட்டாரங்களில் கடும் ஏமாற்றத்தை அளித்தது.
இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறீயீட்டு எண்கள் மதியம் 1.45 மணி வரை தொடர்ந்து சரிந்து கொண்டேயிருந்தது.
காலையில் மிட் கேப், சுமால் கேப் பிரிவு பங்கு விலை அதிகரித்து இருந்தது. ஆனால் நிதி அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்ததும் மேலும் குறைய ஆரம்பித்தன.
மதியம் 1.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 470.95 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,353.53 ஆக சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 140.45, சுமால் கேப் 148.54 பி.எஸ்.இ 500- 178.75 புள்ளிகள் சரிந்தன.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 163.05 (3,01 விழுக்காடு) புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5126.00 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜீனியர் 227.30,சி.என்.எக்ஸ்.ஐ.டி 104.00, பாங்க் நிஃப்டி 224, சி.என்.எக்ஸ் 100-135.55, சி.என்.எக்ஸ் டிப்டி132.05, சி.என்.எக்ஸ் 500-102.40, சி.என்.எக்ஸ் மிட் கேப் 93.50, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-46.15 புள்ளிகள் குறைந்தன.
இன்று கடைசி 1 மணி நேரத்தில் எதாவது மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், பங்குச் சந்தை வட்டாரங்களின் ஏமாற்றம் பங்கு விலைகள் பழைய நிலைக்கு உயர வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
காலை 11 மணி நிலவரம் :
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 114.61 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,708,97 குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 41.05 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5244.05 ஆக குறைந்தது.
ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 37.71, சுமால் கேப் 43.85 புள்ளிகள் அதிகரித்து இருந்தன. அதே நேரத்தில் பி.எஸ்.இ 500- 25.74 புள்ளிகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் இடம் பெறும் அம்சங்களைப் பொறுத்தே பங்குச் சந்தையின் நடவடிக்கை இருக்கும்.
தொழில் மற்றும் வர்த்தக துறைக்கு சாதகமாக இருந்தால், பங்குவிலை உயர வாய்ப்பு உள்ளது.