மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சரிந்த குறியீட்டு எண்கள் மதியம் 1 மணிக்கு மேல் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தன.
மற்ற நாட்டு சந்தைகளில் நிலவிய பின்னடைவு, இந்திய பங்குச் சந்தைகளையும் காலையில் பாதித்தது. மதியத்திற்கு பின் பங்குதளின் விலைகள் உயர்ந்தன.
மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. இன்றுடன் தொடர்ந்து மூன்றாம் நாளாக பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மதியத்திற்கு பிறகு அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், மற்ற முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பித்தனர். இதனால் பங்குகளின் விலை உயர்ந்தது.
இன்று உலோக உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. மிட்கேப், சுமால் கேப் பங்குகளையும் அதிக அளவு வாங்கினார்கள்.
மும்பை பங்குச் சந்தையில் ரூ.6,372 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. நேற்று ரூ.5,735.81 கோடிக்கு வர்த்தகம் நடந்து இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 348.62 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,115.25 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 139.36, சுமால் கேப் 231.37, பி.எஸ்.இ. 500- 149.74 புள்ளிகள் அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 100.90 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,302.90 ஆக அதிகரித்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 184.20,சி.என்.எக்ஸ் ஐ.டி 35 பாங்க் நிஃப்டி 254.85, சி.என்.எக்ஸ் 100-97.85, சி.என்.எக்ஸ் டிப்டி 90.55, சி.என்.எக்ஸ் 500-89.05, சி.என்.எக்ஸ் மிட் கேப் 164.85, மிட்கேப் 50-70.10 புள்ளிகள் அதிகரித்தன. .
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 5 நிறுவனத்தின் பங்கு விலை குறைந்தது.