பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (15:37 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் இருந்த நிலைமை சுமார் 1 மணிக்கு பிறகு மாறியது. பங்கு விலைகள் சீராக அதிகரிக்க ஆரம்பித்தன.

மதியம் 2.05 மணியளவில் சென்செக்ஸ் 232.57 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் நிஃப்டி 75.25 புள்ளிகள் அதிகரித்தது. மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன. மிட் கேப் 102.81, சுமால் கேப் 1634.71, பி.எஸ்.இ 500- 102.82 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற பிரிவு குறீயீட்டு எண்கள் 0.84 விழுக்காடு முதல் 1.46 விழுக்காடு வரை உயர்ந்தன.

கடைசி அரை மணி நேரத்தில்தான் இறுதி நிலவரத்தை கணிக்க முடியும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலை தொடக்கம்.

பங்குச் சந்தைகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த குறியீட்டு எண்கள், இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே சரிந்தன.

காலையில் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. இதேபோல் நிஃப்டி 91.50 புள்ளிகள் சரிந்தது.

மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டதால், அதன் விளைவாக இங்கும் பங்கு விலைகள் குறைந்து குறியீட்டு எண்கள் சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலையில் வர்த்தகம் தொடங்கும் அதிக அளவு சரிந்த குறியீட்டு எண் அதிகரிக்க துவங்கின.

காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 82.50 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,684.00 ஆக இருந்தது.

காலை 11.30 மணி நிலவரம்.

இதே போல் நிஃப்டி 9.45 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5192.55 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறைந்தாலும், மற்ற பிரிவுகளில் உள்ள பங்குகளின் விலை உயர்ந்தது.

நேற்று இறுதியில் 123.98 புள்ளிகள் குறைந்து இருந்த சுமால் கேப் 69.99 புள்ளிகள் அதிகரித்தன. இதே போல் மிட் கேப் 42.92, பி.எஸ். 500-69.99 புள்ளிகள் உயர்ந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் மிட் கேப் தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையின் டோல்ஜோன்ஸ் 175.26, நாஸ்டாக் 41.39,எஸ் அண்ட் பி 500- 18.35 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாடுகளில் ஹாங்காங்கின் ஹாங்செங் 425.99,ஜப்பானின் நிக்கி 3.89,சீனாவின் சாங்காய் காம்போசிட் 317.80,தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 2.68 புள்ளிகள் குறைந்தன.

சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் மட்டும் 7.93 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று வார இறுதி நாளான வெள்ளிக் கிழமை ஆதலால், பங்குகளை விற்பனை செய்து லாப கணக்கை பார்ப்பதால் விலை குறைவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு உண்டு என்று மார்க்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்