தொழில் துறை உற்பத்தி சென்ற மாதத்தை விட அதிகரித்ததோ அல்லது மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றமோ இங்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியாவில் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரிலையன்ஸ் பவர் அதிக அளவு பொதுப் பங்கு வெளியீட்டு மூலம் பணம் திரட்டியது. இது திங்கட்கிழமை பட்டியலிடப்பட்டபோது, பங்குகளின் விலை முக மதிப்பை விட குறைந்தது. இந்த அதிர்ச்சி பங்குச் சந்தைகளில் நேற்றும் நீடித்தது.
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. அதற்கு பிறகு அதிக அளவு ஏற்ற இறக்கமே நாள் முழுவதும் தொடர்ந்தது. இறுதியில் குறியீட்டு எண்கள் குறைந்தன. நேற்று பங்குச் சந்தையில் பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்தன. சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிக அளவு குறைந்தது.
அதிக அளவு பங்குகளின் விலை மாற்றத்தினால், பங்குச் சந்தையின் வர்த்தகர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்தனர். இதன் போக்கை நிர்ணயிக்க முடியவில்லை. நாள் முழுவதும் பங்குகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். நிஃப்டி 4930 க்கும் மேல் அதிகரிக்கவில்லை.
நேற்று ரிலையன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல், கேரின் இந்தியா, ஹிந்த் பெட்ரோ, பாங்க் ஆப் இந்தியா, ராஜேஷ் எக்ஸேபோர்ட், ஐ.எப்.சி.ஐ, ஜே.குமால், ரிலையன்ஸ் பவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கெயில், ஆர்.என், .ஆர்.எல், ஐ.டி.எப்.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு விற்பனையாயின. நேற்று ரூ.55,505 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. (திங்கட்கிழமை ரூ.68,626 கோடிக்கு வர்த்தகம் நடந்தது).
இன்று பங்குச் சந்தை உயருமா?
பங்குச் சந்தையின் சராசரி குறியீட்டு அளவு இரண்டாவது நாளாக நேற்றும் 200 புள்ளி குறைந்ததால், நிஃப்டி உயர வாய்ப்பில்லை. நிஃப்டி முன்பேர சந்தையிலும் 40 விழுக்காடு குறைந்துள்ளது. நேற்றைய நிலையே இன்றும் தொடரும். காலையில் வர்த்தம் தொடங்கும் போது நிஃப்டி நேற்றைய இறுதி நிலையிலேயே இருக்கும். அல்லது 15 முதல் 30 புள்ளிகள் வரை உயர்ந்து இருக்கும்.
நிஃப்டி 4870/4920/4970 என்ற அளவுகளில் இருக்கும். 4970 க்கும் மேல் அதிகரித்தால், இது மேலும் உயர வாய்ப்புள்ளது.
இதற்கு மாறாக நிஃப்டி 4800/4765/4730 என்ற அளவைவிட குறைந்தால், அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வார்கள். இதனால் மேலும் குறைந்து 4690/4650 என்ற அளவிற்கும் குறைய வாய்ப்புள்ளது.