மும்பை தங்கம், வெள்ளி சந்தை இறுதி நிலவரம்!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (20:20 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் நேற்றைய இறுதி நிலவரத்தை ஒப்பிடும்போது, இன்று மாலை நிலவரப்படி 24 காரட் மற்றும் 22 காரட் தங்கத்தின் விலைகள் 10 கிராமுக்கு தலா ரூ.135 அதிகரித்தது. இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.200 அதிகரித்தது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. மேலும், 'இன்று அதிக தங்கம் வாங்கப்பட்டதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது' என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று காலை டிராய் அவுன்ஸ் 915.00/916.00-க்கு துவங்கிய நிலையில், மாலையில் 920.00/922.00-க்கு முடிவடைந்தது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று மாலை இறுதி நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,895 - (காலை துவக்கம் 11,880 ) - (நேற்று இறுதி 11,710)

22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,845 - ( 11,825) - (11,760) - பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,080 - (21,060) - (20,880)

வெப்துனியாவைப் படிக்கவும்