பங்குச் சந்தையில் மாற்றம்!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (15:45 IST)
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காததன் எதிரொலி உடனடியாக பங்கு சந்தையில் பிரதிபலித்ததையடுத்து மும்பை, தேசப் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

இன்று மூன்றாவது காலாண்டி பொருளாதார ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அப்போது அடுத்த காலாண்டு பொருளாதார கொள்கையில் வட்டி விகிதத்தை கால் முதல் அரை விழுக்காடு வரை குறைக்கும் அறிவிப்பு இருக்கும் என்று பங்குச் சந்தை, நிதிச் சந்தை வட்டாரங்களில் நிலவியது.
ஆனால் இதற்கு எதிர் மாறாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வில்லை .

இதன் எதிரொளியாக காலையில் பங்குச் சந்தையில் நிலவிய சூழ்நிலை மாறியது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அதே நேரத்தில் ஏற்ற இறக்கம் என்ற நிலையே இருந்தது.

சென்செக்ஸ், நிஃப்டி மட்டுமல்லாது எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிகரிப்பது, குறைவது என்ற நிலையே தொடர்ந்தது. ஆனால் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு, இன்று காலை அதிகரித்த பங்கு குறியீட்டு எண்கள் கீழே சரிந்து நேற்றைய இறுதி நிலவரத்திற்கு வந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மதியம் 2.15 மணியவில் சென்செக்ஸ் 61.74 புள்ளிகள் குறைந்து இருந்தது.

ஆனால் மிட் கேப் 16.28, சுமால் கேப் 55.68, பி.எஸ்.இ-500 18.94 புள்ளிகள் அதிகரித்து இருந்ததே சிறிது ஆறுதலான விஷயம்.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி நேற்றைய இறுதி நிலவரமான 5,274.10 புள்ளிகள் இருந்தது. அதற்கு மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்து இருந்தன.

இரண்டு பங்கு சந்தைகளிலும் பங்குகளின் விலையில் அதிக ஏற்றத் தாழ்வுகள் நிகழ்கிறது. மாலை கடைசி அரை மணி நேரத்தில் நடக்கும் வர்த்தகத்திலேயே இறுதி போக்கு நிச்சயிக்கப்படும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்