பங்குச் சந்தை : இன்று எப்படி!

வெள்ளி, 18 ஜனவரி 2008 (09:59 IST)
இ‌ன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, நே‌ற்றைய இறுதி நிலவரத்தைவிட அதிக மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை.

சென்செக்ஸ் 19,600-க்கும் கீழாக துவங்கினால், பலர் அதிக அளவு பங்குகள் விற்பனை செய்ய துவங்குவார்கள். சென்செக்ஸ் 19,370 முதல் 19,270 வரை குறைய வாய்ப்பு உள்ளது. 19,270- க்கும் குறைந்தால் மேலும் குறைந்து சென்செக்ஸ் 19,200 முதல் 19,050 வரை குறைய வாய்ப்பு உள்ளது.

பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 19,780க்கு அதிகமாக இருந்தால், பங்குகளை வாங்க ஆர்வம் காட்டலாம். அந்த சூழ்நிலையில் சென்செக்ஸ் 19,900 முதல் 20,150 வரை உயர வாய்ப்பு உள்ளது.

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகளுக்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாள். நாளை பங்கு சந்தையில் அதிக அளவு ஏற்ற இறக்கமாக காணப்பட்டால், சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து, அந்த பணத்தில் ரிலையன்ஸ் பவர் பங்குகளில் முதலீடூ செய்ய முயற்சி செய்வார்கள்.

சென்செக்ஸ் 19,780 க்கும் அதிகமாக இருந்தால் மருந்து நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி, சர்க்கரை ஆலை, பெட்ரோலியம் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களில் பங்குகள் விற்பனையாவதற்கு வாய்ப்பு உண்டு. இதில் ஆர்.என்.ஆர்.எல்., ஜே.பி.அசோசியேட், பஜாஜ் ஹிந்த், ஐ.டி.சி., அட்லாப், ஹெச்.டி.ஐ.எல்., எம்.ஆர்.பி.எல்.,பவர் கிரிட், ஆக்சிஸ் பேங்க் ஆகிய பங்குகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.


நே‌ற்றைய நிலவரம்!

பங்குச் சந்தையில் நே‌ற்று அதிகளவு ஏற்ற இறக்கமாக இருந்தது. காலையில் பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண் குறைந்து இருந்தது. அதற்கு பின் சிறது உயர்ந்தது. ஆனால் அதே நிலை நீடிக்கவில்லை. இறுதியில் குறைந்தது. மும்பை பங்குச் சநதையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது. பிறகு குறியீட்டு எண் குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி அதிகரித்து பிறகு குறைந்தது. நே‌ற்று இறுதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் நிஃப்டி 100 புள்ளிகள் வரை அதிகரித்தது.

நே‌ற்று மின் உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள், சர்க்கரை ஆலை மருந்து உற்பத்தி ஆகிய துறையைச் சேர்ந்த பங்குகள் அதிக அளவு விற்பனையானது.

இதில் அட்லாப், பாம்பே டையிங், பஜாஜ் ஹின்ட், பல்ராம்பூர், கெரின் இந்தியா, ஹின்ட் மோட்டார்ஸ், ஹெச்.டி.ஐ.எல்., ஆர்.என்.ஆர்.எல்., ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக கவனத்தை ஈர்த்தன.

நே‌ற்று 96,056.44 கோடி மதிப்புள்ள பங்குகள் பரிமாற்றம் நடந்தன.

நே‌ற்றைய முக்கிய செய்திகள்:

டி.எல்.எஃப். உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக காய்த்ரி நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) நிகர இலாபமாக ரூ.8,709 கோடி அறிவித்தது. இது சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 162 விழுக்காடு அதிகம். சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.3.081 கோடி நிகர லாபமாக பெற்று இருந்தது.

ரான்பாக்ஸ் லேபாரட்டரிஸ் நிறுவனம், அதன் மருந்து ஆராய்ச்சிக்காக ரான்பாக்ஸி சயின்ஸ் ரிசர்ச் லிமிடெட் என்ற நிறுவனத்தை பிப்ரவரி மாதம் தொடங்குவதாக அறிவித்தது.

ரிலையன்ஸ் எனர்ஜி 2007 டிசம்பர் 31 ந் தேதியுடன் முடந்த இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.301.6 கோடி நிகரலாபமாக பெற்றுள்ளதாக அறிவித்தது. இது சென்ற நிதி ஆண்டில் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 50 விழுக்காடு உயர்வு. சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.201 கோடி நிகர லாபமாக பெற்று இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்