மும்பை தங்கம் வெள்ளி விலை குறைந்தது!
வியாழன், 10 ஜனவரி 2008 (20:12 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.140-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.205-ம் குறைந்தது.
அந்நிய நாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்களால், தங்கம், வெள்ளி விற்பனை அதிக அளவில் இருந்ததால், இதன் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இறுதி விலை நிலவரம்:
24 காரட் 10 கிராம் ரூ.11,195 (நேற்று ரூ.11,330)
22 காரட் 10 கிராம் ரூ.11,140 (11,280)
பார் வெள்ளி கிலோ ரூ. 20,235 (20,440)