மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.110-ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 160 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தது. ஆனால் மும்பையில் அதிகளவு தங்கம் விற்பனைக்கு வந்ததால், இவைகளின் விலை குறைந்தது.
சிங்கப்பூர் சந்தையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்தது.
நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 880.10/880.90 டாலராக இருந்தது (நேற்றைய விலை 877.70/878.50). வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 15.70/15.75 டாலர் (நேற்றைய விலை 15.67/15.72).
இன்றைய காலை விலை நிலவரம் ;
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,220 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 11,170 பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,280.