மும்பை தங்கம் வெள்ளி விலை சரிவு!

சனி, 15 டிசம்பர் 2007 (16:51 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளி, தங்கத்தின் விலை இன்றும் குறைந்தது. நேற்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.350, 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 குறைந்தது.

இன்று இரண்டாவது நாளாக தங்கம் வெள்ளியின் விலை குறைந்தது. இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.245-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.40-ம் குறைந்தது.

சென்ற இரண்டு நாட்களில் பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.595-ம், 24 காரட் தங்கம் 10 கிராமின் விலை 140 குறைந்துள்ளது.

இன்றைய இறுதி விலை:

24 கராட் தங்கம் 10 கிராம் ரூ.10,190
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,140
பார் வெள்ளி கிலோ ரூ.18,625

வெப்துனியாவைப் படிக்கவும்