மும்பை பங்குச் சந்தை 209 புள்ளிகள் உயர்வு!

Webdunia

புதன், 5 டிசம்பர் 2007 (18:36 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 208.57 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 81.65 புள்ளிகளும் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் இருந்தே பங்குகளின் விலை அதிகரித்தது. ஒரு நிலையில் சென்செக்ஸ் 19,750 புள்ளிகளை நெருங்கியது. இந்திய பங்குச் சந்தைகளில் சந்தேகத்திற்கு இடமான அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதாக நேற்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மாநிலங்களவையில் பகிரங்கமாக அறிவித்ததால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டின. இல்லையெனில் சென்செக்ஸ் 19,750 ஐ தாண்டி இருக்கும் என்று புரோக்கர்கள் தெரிவித்தனர்.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போதே, நேற்று இறுதி நிலையை விட சென்செக்ஸ் அதிகளவு இருந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 19,628.85 புள்ளிகளாக இருந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 19,529.50 )

இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 81.65 புள்ளிகள் அதிகரித்தது. நிஃப்டி குறியீட்டு எண் 5,940 ஆக முடிந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 5,858.35)

இன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.332 கோடி மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்தனர்.

இந்திய பங்குச் சந்தை போலவே மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. சாங்காய் 2.58 விழுக்காடு, ஹாங் காங் 1.61 விழுக்காடு, நிக்கி 0.83 விழுக்காடு, ஸ்டெய்ட் டைம்ஸ் 0.91 விழுக்காடு, தைவான் 0.30 விழுக்காடு அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் ஹின்டால்கோ, ஐ.சி.ஐ,.சி.ஐ வங்கி, ரிலையன்ஸ் இன்ட்ஸ்டிரிஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், டி.எல்.எப், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.டி.சி, எல்.அண்ட்.டி, ஓ.என.ஜி.சி, என்.டி.பி.சி, எஸ்.பி.ஐ, பி.ஹெச்.இ.எல், ஐ.டி.சி, சிப்லா, மகேந்திரா அண்ட் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சத்யம், டாடா ஸ்டீல், ஏ.சி.எல், கிரேசம், ஹிந்துஸ்தான் யூனிலிவர், இன்போசியஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்