மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 355ம், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ. 205ம் குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகர்கள் அதிகளவு விற்பனை செய்ததால் விலைகள் குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்று டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை 3.5 விழுக்காடு குறைந்தது.
அதே போல் நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. நியூயார்க் சந்தையில் நேற்று தங்கம் 1 அவுன்ஸ் 785.50 / 786.60 டாலராக இருந்தது. இன்று விலை 792.50 / 793.30 டாலராக அதிகரித்தது.
நேற்று வெள்ளி 1 அவுன்ஸ் 14.35 / 14.40 டாலராக இருந்தது. இன்று 14.51/ 14.57 டாலராக அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 10,125 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 10,075 பார் வெள்ளி 1 கிலோ ரூ. 19,925