மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியவுடன் குறியீட்டு எண்கள் சரிந்தாலும், சிறிது நேரத்திலேயே பங்குகள் விலை அதிகரிக்க துவங்கி விட்டது.
காலையில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 182 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் குறியீட்டு எண் 19,603.09 புள்ளிகளை தொட்டது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 48 புள்ளிகள் குறைந்து அதன் குறியீட்டு எண் 5,864 ஆக குறைந்தது. பிறகு நிலைமை மாறியது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் படிப்படியாக சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்து குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
காலை 11.45 நிலவரப்படி சென்செக்ஸ் 19,789.32 புள்ளிகளாக உள்ளன. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 4.43 புள்ளிகள் அதிகம். தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 18.10 புள்ளிகள் அதிகரித்து 5,930.10 புள்ளிகளாக இருந்தது.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பார்தி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, கிராசிம், ஹெச்.டி.எப்.சி, ஐ. டி.சி, மாருதி, என்.டி.பி.சி, ஒ. என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ, ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்து இருந்தன.
டி.சி.எஸ், பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல், இன்போசியஸ், எல். அண்ட் டி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சத்யம், டாடா ஸ்டீல் விப்ரோ டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்திருந்தன.