மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 170 புள்ளிகள் குறைந்தது. அதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46.15 புள்ளிகள் குறைந்தது.
இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்செக்ஸ் 529 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 174 புள்ளிகள் சரிந்தது.
மதிய உணவு இடைவேளை வரை பங்குகளின் விலை குறைந்தே காணப்பட்டது. அதற்கு பின் இரண்டு மணியளவில் சிறிது சிறிதாக முன்னேறத் தொடங்கியது.
இறுதியில் மாலை நிலவரப்படி சென்செக்ஸ் 18,737.33 புள்ளிகளாக இருந்தது. இது புதன் கிழமை இறுதி நிலவரத்தை விட 170.33 புள்ளிகள் குறைவு (புதன் கிழமை இறுதி நிலவரம் 18,737.20). மிட் கேப் 68.47 புள்ளிகளும், சுமால் கேப் 137.24 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 70.89 புள்ளிகளும் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிப்டி புதன் கிழமை இறுதி நிலவரத்தை விட 46.15 புள்ளிகள் குறைந்தன (புதன் கிழமை இறுதி நிலவரம் 5663.25). மற்ற பிரிவில் உள்ள பங்குகளின் விலைகளும் குறைந்து, இதன் குறியீட்டு எண்களும் குறைந்தன. தேசிய பங்குச் சந்தையிலும் மதிய உணவு இடை வேளைக்கு பின்னரே பங்குகளின் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இந்தியாவில் மட்டுமல்லாது, நியுயார்க், மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், இதன் குறியீட்டு எண்கள் குறைந்தன.