பங்குச் சந்தை கடும் சரிவு

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (11:59 IST)
மும்பை பங்குச் சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் கடும் சரிவை சந்தித்தது. இன்று முதல் 5 நிமிடங்களில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 529 புள்ளிகள் சரிந்தது.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்ரிஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எல் அண்ட் டி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஸ்டெர்லைட், பி.ஹெச்.இ.எல், பார்தி ஏர்டெல், ஸ்டேட் வங்கி ஆகிய பங்குகளின் விற்பனை அதிகளவு இருந்தது. இதனால் இந்த பங்குகளின் விலை குறைந்து சென்செக்ஸ் புள்ளிகளும் சரிந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 174 புள்ளிகள் சரிந்தது.

காலை 11.15 நிலவரப்படி சென்செக்ஸ் குறியீட்டு எண் 432 புள்ளிகள் குறைந்து, 18,475.60 புள்ளிகளாக இருந்தது. ( புதன் கிழமை இறுதி நிலவரம் 18,907.60 )

மிட் கேப் 161.48 புள்ளிகளும், சுமால் கேப் 169.97 புள்ளிகளும், பி.எஸ்.இ - 500 175.50 புள்ளிகளும் குறைந்திருந்தது.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பி.ஹெச்.இ.எல், சிப்லா, டாக்டர் ரெட்டி, கிரேசம், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசியஸ், எல்.அண்ட்.டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, டாடா மோட்டார், எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், டி.சி.எஸ், விப்ரோ, ரிலையன்யன்ஸ் இன்டஸ்டிரிஸ் ஏ.சி.சி, ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தது.

சத்யம், ஏ.சி.எல், ஹுன்டால்கோ, ஐ.டி.சி ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

தேசிய பங்குச சந்தையில் காலை 11.15 மணி நிலவரப்படி நிப்டி
140.35 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5527.90 புள்ளிகளாக இருந்தது. ( புதன் கிழமை இறுதி நிலவரம் 5663.25 ).

தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் சரிந்து காணப்பட்டன.

இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் விலை குறியீட்டு எண்களும் குறைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்