மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.275-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,055-ம் அதிகரித்தது.
காலையில் மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடனேயே பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 1,000மும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.210-ம் அதிகரித்தது.
இதே நிலை நாள் முழுவதும் நீடித்தது. சிறிது சிறிதாக விலை அதிகரித்தது. 1980 ஆம் ஆண்டுகளில் ஈரானில் ஏற்பட்ட புரட்சி, ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் படைகள் சென்றது ஆகிய பதட்டமான நிலையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தது. இதை தொடர்ந்து சர்தேச சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 850 டாலராக அதிகரித்தது.
இப்போதும் அதேபோன்று தங்கத்தின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
இன்று இறுதி விலை விபரம்
தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,735 ( நேற்று 10,460) தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,685 ( 10,410) பார் வெள்ளி கிலோ ரூ.20,740 ( 19,685)