மும்பை பங்குச் சந்தையில் இறுதியில் 190 புள்ளிகள் குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் 55.25 புள்ளிகள் குறைந்தது.
காலையில் வர்த்தகம் துவங்கியதில் இருந்து மதியம் உணவு இடைவேளை வரை இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்களின் ஆய்வில் உள்ள பங்குகளின் விலை அதிகரிகரித்தது. இதனால் இவற்றின் குறியீட்டு எண்களும் ஏறுமுகமாக இருந்தன.
மும்பை பங்குச் சந்தையில் ஒரு நிலையில் 328 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டு எண் 19,919 புள்ளிகளை தொட்டது.
இதே மாதிரி தேசிய பங்குச் சந்தையிலும் 109 புள்ளிகள் அதிகரித்தது நிப்டி 5956.30 புள்ளிகளை தொட்டது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு பங்குச் சந்தைகளிலும பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்தது. இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190.11 புள்ளிகள் குறைந்து, 19,400.67 புள்ளிகளில் முடிந்தது.
இதே போல் மிட்கேப் 60.51 புள்ளிகளும், சுமால் கேப் 43.99 புள்ளிகளும், பி.எஸ்.இ - 100 116.10 புள்ளிகளும், பி.எஸ்.இ - 200 26.04 புள்ளிகளும், பி.எஸ்.இ - 500 77.18 புள்ளிகளும் குறைந்தன.
இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் நடந்த 2,783 பங்குகளில் 1,598 பங்குகளின் விலை குறைந்தது. 1,117 பங்குகளின் விலை அதிகரித்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல், மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், சத்யம், ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டி.சி.எஸ், ஏ.சி.எல், கிரேசம், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசியஸ், எல். அண்ட் டி, மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன.
பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹூன்டால்கோ, ஐ. டி.சி ஆகிய நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.