வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றமில்லை.
காலையில் அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலரின் மதிப்பு 7 பைசா குறைந்தது. 1 டாலர் ரூ.39.23 முதல் ரூ.39.40 வரை விற்பனையானது. இது வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தை விட 7 பைசா குறைவு. பெட்ரோலிய நிறுவனங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான பணத்தை பட்டுவாடா செய்ய டாலரை வாங்கின.
அத்துடன் பங்குச் சந்தையின் சரிவு, ஆசிய நாடுகளின் மற்ற பங்குச் சந்தைகளின் சரிவின் பிரதிபலிப்பு அந்நியச் செலவாணி சந்தையிலும் காணப்பட்டது.
இன்று ரிசர்வ் வங்கி 1 டாலர் ரூ.39.32 என்று விலையை நிர்ணயித்தது. இது சென்ற வெள்ளிக் கிழமையை விட 5 பைசா அதிகம். ரிசர்வ் வங்கி வெள்ளிக் கிழமை 1 டாலர் ரூ.39.37 என்று விலை நிர்ணயித்திருந்தது.