மும்பை தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

Webdunia

வெள்ளி, 2 நவம்பர் 2007 (19:57 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கம் அதிகளவு வாங்கவில்லை. இதனால் 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.80 குறைந்தது,.

இதே போல் பார் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 400 குறைந்தது.

லண்டன் சந்தையில் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது. ஆனால் இதன் பிரதிபலிப்பு மும்பை சந்தையில் இல்லை. இன்று வெள்ளிக் கிழமை என்பதால், நகை உற்பத்தியாளர்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

இன்றைய இறுதி விலை நிலவரம்:

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,090 (நேற்று 10,150)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.9, 940 (10,170 )
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,700 (19,100)

வெப்துனியாவைப் படிக்கவும்