காய்கறி விலை கடும் உயர்வு!
Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (09:56 IST)
மழை, தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து காய்கறிகளும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் காய் கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளதாலும்,
மேலும் தீபாவளி பண்டிகை காரணமாகவும் விலை உயர்ந்துள்ளது என்று காய்கறி சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரூ.5க்கு விற்ற பீட்ரூட் தற்போது 5 ரூபாய் விலை உயர்ந்து ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. 16 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ் ரூ.25க்கு விற்கப்படுகிறது.
16 ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரைக்காய் 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் தற்போது ரூ.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ரூ.7 க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் கேரட், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
நாசிக் வெங்காயம் ரூ.20
பெரிய வெங்காயம் ரூ.18
சாம்பார் வெங்காயம் ரூ.22
கத்தரிக்காய் ரூ.10
வெண்டைக்காய் ரூ.17
பீன்ஸ் ரூ.25
புடலங்காய் ரூ.15
ஊட்டி கேரட் ரூ.15
பெங்களூர் கேரட் ரூ.12
நாட்டு தக்காளி ரூ.20
பெங்களூர் தக்காளி ரூ.18
உருளைக்கிழங்கு ரூ.14
சேனைக் கிழங்கு ரூ.05
கோஸ் ரூ.06
பாகற்காய் ரூ.10
முள்ளங்கி ரூ.07
பீட்ரூட் ரூ.10
அவரைக்காய் ரூ.33
கோவக்காய் ரூ.08
சுரக்காய் ரூ.04
பார்கர்காய் ரூ.12
மிளகாய் ரூ.12
இஞ்சி ரூ.25
சேம்பு ரூ.06
முருங்கக்காய் ரூ.20
வெள்ளரிக்காய் ரூ.04
பூசணி ரூ.02
சவ்சவ் ரூ.08
நுனுகோல் ரூ.06
பரங்கிகாய் ரூ.02
பட்டாணி ரூ.50
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஆப்பிள் ரூ.68
ஆரஞ்சு ரூ.36-52
சாத்துக்குடி ரூ.20
கொய்யா ரூ.18
க.திராட்சை ரூ.40
ப.திராட்சை ரூ.46
மாதுளை ரூ.30-40
சீத்தா ரூ.20
பப்பாளி ரூ.16
சப்போட்டா ரூ.30
கிரினி பழம் ரூ.20
தர்பூசணி ரூ.12