ரூபாய் மதிப்பு சரிவு!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (17:17 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இரண்டாவது நாளாக இன்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. காலையில் 1 டாலர் ரூ.39.60/62 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது.

பிறகு ரூபாய் மதிப்பு சிறிது அதிகரித்து 1 டாலர் ரூ.39.56 என்ற அளவில் இருந்தது. பங்குச் சந்தை போலவே, அந்நியச் செலாவணி சந்தையிலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.

இன்று மாலைக்குள் 1 டாலர் ரூ.40 என்ற அளவை தொட்டுவிடும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு சரிந்து விடாமல் இருக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து தலையிட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்