தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (15:09 IST)
இன்று மும்பையில் தங்கம், வெள்ளி விலைகள் அதிகரித்தன. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.85, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்தது.

நேற்று இறுதியில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.9,470 ஆக இருந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.9,545 ஆக விற்பனையானது.

இதே போல் நேற்று இறுதியில் 22 காரட் தஙகத்தின் விலை 10 கிராம் ரூ.9,420 ஆக இருந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து. 10 கிராம் ரூ.9,495 என்று விற்பனையானது.

இதே போல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.85 அதிகரித்தது.
நேற்று மாலையில் வெள்ளி 1 கிலோ ரூ.18,100 ஆக இருந்தது, இன்று காலை கிலோ ரூ.18,195 ஆக விற்பனையானது.

கடந்த இரண்டு நாட்களாக நகை தயாரிப்பாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இன்று நகை வியாபாரிகள் தங்கம் வாங்க ஆரம்பித்ததால், விலைகள் உயர்ந்தது. அதே போல் தொழில் நிறுவனங்கள், வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்