மும்பை சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்து காணப்பட்டது!
வெள்ளி நேற்றைய விலையை விட கிலோவுக்கு ரூ.120 குறைவாக விற்பனையானது. இதேபோல் தங்கத்தின் விலையும் 10 கிராமுக்கு ரூ.75 குறைந்தது.
நகை தயாரிப்பாளர்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தாததே இந்த விலை குறைவுக்கு காரணம் என்று மும்பை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அரை சதவிதம் குறைத்ததால், முதலீட்டாளர்கள் புதன்கிழமையன்று அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்தனர்.
ஆனால் இன்று தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்தது. இதனால் விலை உயரவில்லை என டோக்யோவில் தங்கம் வெள்ளி சந்தையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே போல் நியுயார்க் தஙகம், வெள்ளி சந்தையிலும் விலை உயரவில்லை.
மும்பையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது வெள்ளி கிலோ ரூ.17,720-க்கும், தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.9,425 க்கும், ஆபரணத் தங்கம் ரூ.9,375 க்கும் விற்பனை செய்யப்பட்டது.