பங்குச் சந்தை சரிவுக்குக் காரணம்?

வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (19:42 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் :

பங்குச் சந்தைக்குரிய கிரகங்கள் புதனும், சுக்ரனும்.

சுக்கிரன் அதன் பகைக் கோளான குருவுடன் உட்கார்ந்து இருக்கிறது. அதாவது குருவும், சுக்கிரனும் ஒன்றாக இருந்தால் அது குரு-சுக்ரன் மூடம் என்று அழைக்கப்படும். பிப்ரவரி 15 ஆம் தேதி சுக்ரன் கொஞ்சம் நல்ல இடத்திற்கு வருகிறது. அதில் இருந்து நிலை கொஞ்சம் மாறும்.

மேலும் புதனின் போக்கு சுமாராகத்தான் இருக்கிறது. புதன் பகைக் கோளான செவ்வாயின் பார்வையில் இருக்கிறது. மகர வீட்டில் அமர்ந்திருக்கிறது. புதன் மகரத்திற்கு வந்தது டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று.

செவ்வாய் வீட்டில் அமர்ந்து இருப்பது இன்னும் சற்று நாட்களுக்குத் தொடரும். மார்ச் 6 ஆம் தேதிதான் புதன் செவ்வாயின் பார்வையில் இருந்து விலகுகிறது.

எனவே பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து கொஞ்சம் சுமாரான நிலை ஏ‌ற்படும். பின்னர் மார்ச் 6ல் தான் ப‌ங்கு‌ச்‌ச‌ந்தை நிலை நல்லபடியாக ஆகும். அதன்பிறகு பங்குச்சந்தை நிலை சீராக போகும்.

பின்னர் புதன் நீச்சமடையும். மார்ச் 23 ஆம் தேதிய‌ன்று புதன் நீச்சமாகிறது. எனவே அப்போதில் இருந்து மீண்டும் பங்குச் சந்தை நிலை ஏற்ற இறக்கம் அதிகரிக்கும். பின்னர் ஏப்ரல் 10 ஆம் தேதியில் இருந்து நிலை சீரடையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்