சீதாப்பழ சீசன் தொடக்கம்!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (18:06 IST)
கொடைக்கானல்: கொடைக்கானலில் சீதாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், இதன் விற்பனை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீதாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்த பழம் அதிக அளவு விற்பனைக்கு வர துவங்கியுள்ளது.

கொடைக்கானல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலா, ஆரஞ்சு, கொய்யா, வாழை, பட்டர் புரூட் உட்பட பல வகையான பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த வருடம் கொடைக்கானல், பேத்துப்பாறை, வடகரைப்பாறை, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் ஆகியப் பகுதிகளில் சீதாப்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது.

இங்கிருந்து பல பகுதிகளுக்கும் விற்பனைக்காக சீதாப்பழம் அனுப்பப்படுகிறது. இந்த பழத்தில் பல வைட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த மலைப் பகுதிகளில் விளையும் சீதாப்பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை எடை இருக்கும். இதனை கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி சாப்பிடுவதுடன், வாங்கியும் செல்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்