மிளகாய் விதை மானிய விலையில் விற்பனை!

புதன், 24 செப்டம்பர் 2008 (17:35 IST)
மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.

ராஜபாளையம், சத்திரப்பட்டி, கீழராஜ குலராமன், தளவாய்புரம் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள புஞ்சை இறவைத் தோட்டங்களில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழக அரசு தோட்டக் கலைத் துறை வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் கே-1 ரக மிளகாய் விதைகள் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

ரூ. 156 விலை உள்ள அரை கிலோ விதை ரூ. 78 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரக விதையை விவசாயிகள் சாகுபடி செய்தால் 110 நாட்களில் மகசூல் ஈட்டலாம் எனத் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்