விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க திருச்சி மாவட்டத்திற்கு 2,975 டன் கலப்பு உரம் ஒதுக்கீடு செய்திருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் டி.சவுண்டையா தெரிவித்துள்ளார்.
சென்ற மாதம் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் நிகழ்ச்சியின் போது, விவசாயிகள் கலப்பு உரத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. உரத்தட்டுப்பாட்டை நீக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
விவசாயிகளின் கோரிக்கையை, மாநில விவசாய துறைக்கு அனுப்பப்பட்டது.
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் படி, விவசாய ஆணையாளர் 16:20:0 கலப்பு உரம் 100 டன், 10:26:26 கலப்பு உரம் 150 டன், 20:20:0 கலப்பு உரம் 1,625 டன், 15:15:15 கலப்பு உரம் 200 டன் ஆகியவற்றை திருச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், வியாபாரிகள் மூலமாகவும் விற்பனை செய்யப்படும். விவசாயிகளுக்கு உரம் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை விவசாய துறையின் இணை இயக்குநர் கண்காணித்து, பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் டி.சவுண்டையா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.