இந்த கரிப் பருவத்தில் நெல், சோயா தவிர மற்ற பயிர் வகைகள் சாகுபடி செய்யும் நிலப்பரப்பு குறைந்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜீலை மாத கடைசி வாரத்திற்கு பிறகு போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பல மாநிலங்களில் சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்துள்ளது.
இதனால் நவதானியங்கள், பருப்பு வகைகளின் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மத்திய விவசாய அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள தகவலின் படி, சிறு தானியங்கள் 171.1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது (சென்ற வருடம் 194.1 லட்சம் ஹெக்டேர்).
இதேபோல் பருப்பு வகைகளின் சாகுபடி அளவும் குறைந்துள்ளது. இந்த கரீப் பருவத்தில் 89.8 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன (சென்ற வருடம் 89.8 லட்சம் ஹெக்டேர்).
எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவும் குறைந்துள்ளது.
இந்த கரிப் பருவத்தில் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யும் பரப்பளவும் குறைந்துள்ளது. எண்ணெய் கடுகு, நிலக்கடலை சாகுபடி அளவு குறைந்துள்ளது. சோயா மட்டும் அதிகரித்துள்ளது. நிலக்கடலை 48.1 ல.ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது (சென்ற வருடம் 29.3 ல.ஹெ).
சோயா 92.8 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 86 ல.ஹெ).
பணப்பயிர் சாகுபடி செய்யும் அளவும் குறைந்துள்ளது. பருத்தி 85.9 ல.ஹெ. (90.7 ல.ஹெ). கரும்பு 53 ல.ஹெ. (44.1 ல.ஹெ), சணல் 7.4 ல.ஹெ (8.3 ல.ஹெ).
இந்த கரிப் பருவத்தில் நெல் மட்டுமே அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 282.1 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் 256.4 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது.