மே‌ட்டூ‌ர் ‌‌நீ‌ர்ம‌ட்ட‌‌ம் 90.47 அடியாக குறை‌ந்தது!

சனி, 28 ஜூன் 2008 (12:14 IST)
கா‌‌வி‌ரி டெ‌‌ல்டா பாசன‌த்‌‌தி‌ற்காக ‌த‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து‌ ‌விட‌ப்ப‌ட்டதை தொட‌ர்‌ந்து மே‌ட்டூ‌ர் அ‌ணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 90.47 அடியாக குறை‌ந்து‌ள்ளது.

அண‌ை‌யி‌ன் மொ‌த்த கொ‌ள்ளளவு 120 அடியாகு‌ம். அணை‌‌க்கு 454 கன அடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணை‌யி‌ல் இரு‌ந்து 11,970 கன அடி த‌‌ண்‌‌ணீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.

பாசன‌த்‌தி‌ற்காக க‌ல்லணை‌யி‌ல் இரு‌ந்து 3,633 கனஅடி ‌நீரு‌ம், வ‌ண்ணா‌ர் கா‌வி‌ரி‌யி‌ல் இரு‌ந்து 1,804 கனஅடி ‌நீரு‌ம், க‌ல்லணை கா‌ல்வா‌‌யி‌‌ல் இரு‌ந்து 1,008 கனஅடி ‌நீரு‌ம் ‌திற‌ந்து வ‌ி‌ட‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்