மேட்டூர் நீர் மட்டம் 112 அடி!

Webdunia

வெள்ளி, 12 அக்டோபர் 2007 (14:10 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 112. 01 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 6,505 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கஅடி திறந்து விடப்படுவதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த பல வாரங்களாக அணையில் இருந்து விநாடிக்கு 22,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்