தொகுதிக் கண்ணோட்டம் : வட சென்னை:

தமிழகத்தின் தலைநகரில் அமைந்துள்ள வசென்னைத் தொகுதி, அதிக அளவில் தொழிற்சாலைகளையும் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
webdunia photoWD

அதன் காரணமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்கப் பிரிவான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் செ.குப்புசாமி, இங்கு அக்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு, தொடர்ந்து 3-வது முறையாக கடந்த மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

கடந்த 1957 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இத்தொகுதி, தி.மு.க. வின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் 9 முறை தி.மு.க.வும், 3 முறை அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் (1962- 67, 1989- 91, 1991- 96) வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் செ.குப்புசாமிக்கு (தி.மு.க.) ஐந்து லட்சத்து 70 ஆயிரத்து 122 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து களமிறங்கிய பாரதிய ஜனதா வேட்பாளர் சுகுமார் நம்பியார், மூன்று லட்சத்து 16 ஆயிரத்து 583 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இரண்டு லட்சத்து 53 ஆயிரத்து 539 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது.

இத்தொகுதியில் அடங்கியுள்ள திருவொற்றியூர், வியாசர்பாடி, சர்மா நகர், எம்.கே.பி., நகர், தங்கசாலை, தண்டையார் பேட்டை, வண்ணார பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நடுத்தர, உழைப்பாளி மக்கள்தான் அதிகளவில் வசித்து வருகின்றனர். துறைமுகம், பிராட்வே, பெரம்பூர், ஜமாலியா உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பிருந்த சட்டப் பேரவைத் தொகுதிகள்: ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம்.

தற்போதுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்: திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), ராயபுரம்.

நீக்கப்பட்ட தொகுதிகள்: துறைமுகம், வில்லிவாக்கம

சேர்க்கப்பட்டவை: கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி)