ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விரைவில் 1500 புரபஷனரி அதிகாரிகளை தேர்வு செய்ய உள்ளது.
ஏதாவது பட்டப்படிப்பு முடித்த 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஏப்ரல் 28-ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும்.
இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியாற்றும் இடத்தை பொறுத்து மாதம் ரூ.69,000 வரை ஊதியம் கிடைக்கும். தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கை 1500 என்பது தற்காலிகமானது தான். இது மாறுபடவும் வாய்ப்பு உள்ளது என்று வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.