வேலைவாய்ப்பு கண்காட்சி

செவ்வாய், 1 ஜூலை 2008 (15:09 IST)
சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளு‌க்கான வேலைவாய்ப்பு கண்காட்சி வரு‌ம் 5 ம‌ற்று‌ம் 6ஆ‌ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதகு‌றி‌த்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறுகை‌யி‌ல், சென்னை பல்கலைக்கழகம், டெக்ரூட் என்ற நிறுவனத்துடன் இணை‌ந்து நடத்தும் வேலைவாய்ப்பு கண்காட்சி 5, 6-ந் தேதிகளில் சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

இதில் சென்டா, ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எச்.சி.எல்., டெக்டான் டெக்னாலஜீஸ் உள்பட ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவைப்படும் ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளன.

க‌ணி‌னி, ‌பி‌பிஓ, கா‌ல்செ‌ன்ட‌ர்க‌ள், இ-ப‌ப்‌ளி‌‌ஷ‌ி‌ங் உ‌ள்‌ளி‌ட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கும், வங்கி, நிதி, காப்பீடு, தொலைத்தொடர்பு, விருந்தோம்பல் உள்ளிட்ட பணிகளுக்கும் ஊ‌ழிய‌ர்க‌ள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். முதலில் எழு‌த்து‌த் தே‌ர்வு நட‌த்த‌ப்படு‌ம். நே‌ரி‌ல் வர முடியாதவ‌ர்க‌ள் எழு‌த்துத்தேர்வை இணைய‌த்‌தி‌ன் வா‌யிலாகவு‌ம் எழுதலா‌ம்.

வேலைவாய்ப்பு கண்காட்சிக்கு வருபவ‌ர்க‌ள் 10 சுய ‌விவர‌ அ‌றி‌க்கை (பயோ-டேட்டா), 10 வ‌ண்ண புகை‌‌ப்பட‌ம், சான்றொப்பம் பெற்ற கல்விச்சான்றிதழ்கள் (10 பிரதிகள்) ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் எ‌ன்று துணைவேந்தர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்