கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ளதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (பிப்ரவரி 5-ம் தேதி) தொடங்கவிருந்த சென்னை அறிவியல் திருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் கல்லூரி விடுதிகளையும் மூடுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருந்த சென்னை அறிவியல் விழா, தேதி குறிப் பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அறிவியல் விழா எப்போது நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று அறிவியல் மையத்தின் துணை தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.