காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து, வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில், காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப, கடந்த 12-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.
தகுதி அடிப்படையில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வில் கலந்து கொள்கிறவர்கள் யாரும், பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்று நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.