திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை குறித்த விவரங்களை கணினியில் பதிவு செய்யும் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தாற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ள இப்பணியில் சேர தமிழில் தட்டச்சு பயிற்சி பெற்றிருப்பதுடன் கணினியும் இயக்கத் தெரிந்திருப்பது அவசியமாகும். பணிக்கேற்றவாறு ஊதியம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்திலுள்ள எல்காட் மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.