அரசு பணியில் ஆதரவ‌ற்ற ‌விதவைகளு‌க்கு முன்னுரிமை!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (13:15 IST)
சென்னை: வேலைவாய்ப்பு துறை மூலம் அரசு பணிக்கு தேர்வு செய்யும் போது, மு‌ன்னா‌ள் ராணுவ‌த்‌தின‌ர், ஆதரவ‌ற்ற ‌விதவைகளு‌க்கு தொடர்ந்து மு‌ன்னு‌ரிமை வழ‌ங்க‌ தமிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழக அரசு பணியாளர் துறை வெளியிட்டுள்ள ஆணை‌யி‌ல், "முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகளை, அரசு பணிக்கு தேர்வு செய்யும் போது முன்னுரிமை அளிப்பதால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் பரிந்துரைத்தது.

ஆனால், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகளின் சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பு துறை மூலம் அரசு பணிக்கு தேர்வு செய்யும் போது முன்னுரிமையை தொடர்ந்து வழங்க அரசு முடிவெடுத்துள்ளது" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்