இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் உதவித்தொகை!

திங்கள், 6 அக்டோபர் 2008 (13:45 IST)
பொறியியல் பட்டம் படிக்கு மாணவர்களுக்கு 30,000 யூரோ வரை கல்வி உதவித் தொகை வழங்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, எவ்வித தகுதி தேர்வையும் நடத்தாமல் 25 மாணவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளின் பொறியியல், ஆராய்ச்சிக் குழுமமும், பிரான்ஸ் தூதரகமும் இணைந்து இந்த கல்வி உதவித் தொகையை வழங்கும்.

எனினும், இளம்நிலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்று, ஐரோப்பிய நாடுகளின் பொறியியல், ஆராய்ச்சிக் குழுமத்தில் 2 ஆண்டு எம்.எஸ். படிப்பை படிக்க விருப்பம் மாணவர்களுக்கே இந்த உதவித் தொகை கிடைக்கும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதுதொடர்பாக விண்ணப்பத்தினை அனுப்பவோ, அல்லது மேலும் விவரங்களை அறியவோ www.nplusi.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்