அக்.5ல் தீயணைப்புத்துறை எழுத்துத் தேர்வு!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (12:04 IST)
தமிழ்நாடு தீயணைப்புத்துறையில் பணியாளர் நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு வரும் 5 ஆம் தேதி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு எழுத்துத் தேர்வு தொடங்கும் என்றும், இத்தேர்வை எழுதுவோர் காலை 8 மணியில் இருந்து 8.45-க்குள், தேர்வு அனுமதி நுழைவுச்சீட்டுடன் தேர்வுக் கூடத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தேர்வுக் கூடத்தில் செல்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்