முதுநிலை பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் சேருவதற்காக கலந்தாய்வு வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூடுதல் மருத்துவக்கல்வி இயக்குனர் ஷீலா கிரேஸ் ஜெபமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் வரும் 26ம் ஆம் தேதி போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. (நர்சிங்) படிப்பில் சேருவதற்காக கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கென 600 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கலந்தாய்வுக்கான அழைப்பிதழ் கடிதம் கிடைக்காதவர்களும் இதில் பங்கேற்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பான மேலும் விவரங்களை டபிள்யூடபிள்யூடபிள்யூ. டிஎன்ஹெல்த்.ஆர்க் என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.