கல்வி உதவித்தொகைக்கு ரூ.1000 கோடி: அமைச்சரவை ஒப்புதல்!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (18:38 IST)
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு ரூ. 1,000 கோடியை ஒதுக்க, பொருளாதார விவாகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் புதுடெல்லியில் இன்று நடந்த இக்கூட்டத்தில் இதற்கு அனுமதி தரப்பட்டது.

நடப்பு 2008- 09 ஆம் ஆண்டில் தேசியக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை மீண்டும் புதிப்பிக்கவும், மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் தந்துள்ளது.

புதுப்பிக்கப்படும் தேசியக் கல்வி உதவித்தொகை திட்டத்தின்படி, மாணவர்களுக்கு நிலுவையின்ற் வங்கிகள் வாயிலாக உதவித்தொகை அளிக்கப்படும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் திறமை மிக்க ஏழை மாணவர்கள் இதனால் பயன் அடைவார்கள்.

புதுப்பிக்கப்பட்ட தேசியத்திட்டம் நடப்பாண்டிலேயே அமலுக்கு வரும். மாணவர் தனது படிப்பை நிறைவு செய்யும்போது இத்தொகை வழங்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்