ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி படிப்பை தொடரும் இந்திய மாணவர்களுக்கு அங்குள்ள வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் கட்டண விலக்கு சலுகையை அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை வரும் அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வரும் 2009 ஆம் ஆண்டு தொடங்கும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு இந்த கட்டண விலக்கு சலுகை பொருந்தும்.
இந்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான இந்திய மாணவர்கள், வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் வழங்கும் இந்த கட்டணச் சலுகை பெறத் தகுதியானவர்கள். கல்விக் கட்டணம், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான மருத்துவக் காப்பீடு ஆகியவை இதில் அடங்கும்.
தகுதிகள் : இந்த உதவித்தொகை மற்றும் கட்டண விலக்குச் சலுகையைப் பெற விரும்புவோர் இந்தியக் குடிமனாக இருக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முழுநேரமாக ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்பு மேற்கொள்பவராக இருத்தல் வேண்டும். இரண்டாண்டு முதுநிலை படிப்பு அல்லது 4 ஆண்டு ஆராய்ச்சி படிப்புகளுக்கு இந்த கட்டணச் சலுகை பொருந்தும்.
இதற்கான விண்ணப்பத்தை டபிள்.டபிள்யூ.டபிள்யூ.ஸ்காலர்ஷிப்ஸ். யுடபிள்யூஏ.ஏயு என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.