சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியில் செப்டம்பர் 12 முதல் வரும் 14- ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

இந்த முகாம் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவையில் உயர் கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டபடி இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்