சிவில் சர்வீஸ் தேர்வில் திருச்சியில் 8 பேர் வெற்றி

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (15:29 IST)
நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் திருச்சியை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ப. சுரேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்