பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. ஆண்டு இறுதி பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 23ஆம் தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 25ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும், மெட்ரிக்குலேஷன் தேர்வு மார்ச் 18ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வை 6 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகளும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் பேரும், மெட்ரிக்குலேஷன் 10ஆம் வகுப்பு தேர்வை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 400-க்கு மேற்பட்டவர்களும் எழுதுகிறார்கள். மொத்தத்தில் 18 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பிளஸ்-2 தேர்வு அட்டவணை :
மார்ச் 2 - தமிழ் முதல் தாள் மார்ச் 3 - தமிழ் 2-ஆம் தாள் மார்ச் 4 - உளவியல், சுருக்கெழுத்து மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள் மார்ச் 6 - ஆங்கிலம் 2-ஆம் தாள் மார்ச் 7 - தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மார்ச் 9 - இயற்பியல், வணிகவியல் மார்ச் 11 - புவியியல், வணிக கணிதம் மார்ச் 12 - வேதியியல் மார்ச் 13 - கணக்குப் பதிவியல் மார்ச் 14 - மனையியல், நுண்ணுயிரியல்,உயிரி-வேதியியல், நர்சிங், நியூட்ரிசியன்ஸ் மற்றும் டயட்டிக்ஸ் மார்ச் 16 - கணிதம், விலங்கியல் மார்ச் 17 - பொருளாதாரம் மார்ச் 18 - தொழில்நுட்ப பாடங்கள் மார்ச் 19 - கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு மொழிப்பாடங்கள், சிறப்பு ஆங்கிலம், புள்ளியியல் மார்ச் 21 - அரசியல் அறிவியல், அடிப்படை அறிவியல், இந்திய கலாசாரம் மார்ச் 23 - உயிரியல், தாவரவியல், வரலாறு.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை :
மார்ச் 25 - தமிழ் முதல் தாள் மார்ச் 26 - தமிழ் 2-ஆம் தாள் மார்ச் 30 - ஆங்கிலம் முதல் தாள் மார்ச் 31 - ஆங்கிலம் 2-ஆம் தாள் ஏப்ரல் 3 - கணிதம் ஏப்ரல் 6 - அறிவியல் ஏப்ரல் 8 - சமூக அறிவியல்.
மெட்ரிக்குலேஷன் தேர்வு அட்டவணை :
மார்ச் 18 தமிழ் முதல் தாள் மார்ச் 20 தமிழ் 2-ஆம் தாள் மார்ச் 24 ஆங்கிலம் முதல் தாள் மார்ச் 25 ஆங்கிலம் 2-ஆம் தாள் மார்ச் 30 கணிதம் முதல் தாள் மார்ச் 31 கணிதம் 2-ஆம் தாள் ஏப்ரல் 2 அறிவியல் முதல் தாள் ஏப்ரல் 3 - அறிவியல் 2-ஆம் தாள் ஏப்ரல் 6 - வரலாறு மற்றும் குடிமையியல் ஏப்ரல் 8 - புவியியல், பொருளாதாரம்.
இந்த அதிகாரப்பூர்வ தேர்வுக்கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டார்.