அண்ணா பல்கலை.‌யி‌ல் மாணவ‌ர்க‌ள் செ‌ல்பே‌சி பய‌ன்படு‌த்‌தினா‌ல் இடை‌‌நீ‌க்க‌ம் : ம‌ன்ன‌ர் ஜவக‌ர்

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:40 IST)
அ‌ண்ணப‌ல்கலை‌ககழக‌ மாணவ‌ர்க‌ளவகு‌ப்பநேர‌த்‌தி‌லசெ‌ல்பே‌சி பய‌ன்படு‌த்‌தினா‌லமுத‌லி‌ல் 10 நாஇடை‌நீ‌க்கமு‌ம், தொட‌ர்‌ந்தஅதமாணவ‌ரஇர‌ண்டாவதமுறையாஈடுப‌ட்டா‌ல் 30 நா‌ளஇடை‌நீ‌க்க‌மு‌மசெ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றதுணைவே‌ந்த‌ரம‌ன்ன‌ரஜவக‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இந்த புதிய நடைமுறை வரு‌ம் ஜனவரி 5ஆம‌் தேதி முதல் அம‌லு‌க்கு வரு‌‌கிறது எ‌ன்ற‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் தெ‌‌ரி‌வி‌க்கை‌யி‌ல், மாணவ, மாணவிக‌ள் க‌ல்‌வி‌யி‌ல் கவன‌ம் செலு‌த்‌தி ந‌ன்கு படி‌த்து, ந‌ல்ல வேலைவா‌ய்‌ப்பை‌ப் பெ‌ற்று அவ‌ர்களது பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் கனவை ‌நிறைவேறற வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் செ‌ல்பே‌சி பய‌ன்படு‌த்துவ‌தி‌ல் க‌ட்டு‌ப்பா‌டுக‌ள் ‌வி‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், மாணவ‌ர்க‌ள் த‌ங்களது வகு‌ப்புகளு‌க்கு செ‌ல்வத‌ற்கு மு‌ன்னா‌ல் செ‌ல்பே‌சிகளை சு‌வி‌ட்‌ச் ஆ‌ப் செ‌ய்ய வே‌ண்டு‌ம். எ‌ந்த காரண‌ம் கொ‌ண்டு‌ம் வகு‌ப்பு நேர‌த்‌தி‌ல் செ‌ல்பே‌சியை பய‌ன்படு‌த்த‌க்கூடாது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்