'கேட்' (CAD -Computer Aided Designing) பயிற்சி மையத்தில் சேருபவர்களுக்கு ஸ்காலர்ஷிப் அளிப்பதற்கான தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு நாட்கள் நடத்த உள்ளதாக 'கேட்' நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"கேட் குவஸ்ட் 2009" என்னும் ஸ்காலர்ஷிப் தேர்வினை கேட் நிறுவனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.
ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய 3 துறைகளிலும் மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிக்கும் வகையில் 2 மணி நேரம் தேர்வுகள் நடத்தப்படும்.
பட்டப் படிப்பு, பட்டயம், பொறியியல் உள்ளிட்டவற்றை பயின்றுவரும் மாணவர்களும், பணியாற்றுவோரும் இந்த இலவசத் தேர்வினை எழுதிப் பயன்பெறலாம்.
மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் கேட் பயிற்சி மையத்தில் சேரும்போது அதிகபட்சமாக 50 விழுக்காடு வரை ஸ்காலர்ஷிப் அளிக்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு 044-28474959 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்" என்று கூறப்பட்டுள்ளது.